|
| |
|
| |
|
| |
| "யுவர் பேபி கேன் ரீட்" என்பது என்ன? |
|
"யுவர் பேபி கேன் ரீட்" என்னும் இச்செயல்திட்டம் எழுத்துக்கள், வார்த்தைகள், மற்றும் உச்சரிப்புக்களை உங்கள் குழந்தை தன் பிஞ்சுவயதிலேயே கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
"யுவர் பேபி கேன் ரீட்" என்பது குறிப்பாக, மொழியின் எழுதப்பட்ட வடிவங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.
|
|
|
"யுவர் பேபி கேன் ரீட்" எப்படி வேலை செய்கிறது? |
|
"யுவர் பேபி கேன் ரீட்" திட்டம் செயல்படுத்த சுலபமானது, தவிர மிகவும் பிடிக்கும் விளையாட்டு போன்றது! அடிப்படையில், இந்த திட்டம் ஊடாடு முறை (interactive) மற்றும் பல்முனை-புலனுணர்தல் (multi-sensory) முறையை பயன்படுத்துகிறது. "யுவர் பேபி கேன் ரீட்" ஐ பயன்படுத்தும்போது, குழந்தைகள் வார்த்தைகளை கண்ணால் பார்க்கும் அதே நேரத்தில் அவற்றை காதால் கேட்கவும் செய்கிறார்கள். குழந்தைகள், மற்றெப்போதையும் விட தங்கள் பிஞ்சு வயதில்தான் சுலபமாகவும் வேகமாகவும் மொழியை கற்றுக்கொள்வதால், எழுத்து மொழி மற்றும் பேசும் மொழியை கற்பிக்க இந்த இயற்கையாக அமைந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறோம்.
|
|
கூடுதலாக, வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள உதவும் வகையில், வார்த்தைகளை கூறச்சொல்லியும் உடல் செய்கைகளை செய்யச் சொல்லியும், குழந்தைகளை பங்கேற்க நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். கூடவே, வார்த்தைகளுக்கு தொடர்புடைய சில உடல் அசைவுகளையும் குழந்தைகள் செய்யுமாறு டாக்டர் டிட்சர் பரிந்துரைக்கிறார். ஆகவே இந்த செயல்திட்டம் குட்டிக் குழந்தைகளை கைதட்டுதல், கையசைத்தல், பாடுதல், உடல் அங்கங்களை சுட்டிக்காட்டுதல் போன்றவற்றை செய்யுமாறு உற்சாகப்படுத்துகிறது.
இந்த வகையான ஊடாடு முறை மற்றும் பல்முனை-புலனுணர்தல் முறையுடன் கூடிய கற்றல், மேன்மையானது எனக் காட்டப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு கற்றுக்கொள்வது குழந்தைகளிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தவிர இது விளையாட்டு போன்றது! குழந்தைகள் டிவி பார்ப்பதில் செலவிடும் சராசரி நேரத்தைக்காட்டிலும் குறைவான நேரத்தில் இந்த செயல்திட்டத்தை சுலபமாக செய்து முடித்து விடலாம். இந்த திட்டத்தின் மூலம் படிப்பதை கற்றுக்கொள்ளும் வரை, உங்கள் குழந்தை டிவியில் ஏனையவற்றை காண்பதை குறைத்துக் கொள்ளுமாறு அழுத்தமாக பரிந்துரைக்கிறோம்.
|
|
|
|
இந்த செயல்திட்டத்தை என் குழந்தைக்கு எப்போது துவங்குவது? |
|
ஒரு குழந்தையின் மூளை கடற்பஞ்சு போல் விஷயங்களை உறிஞ்சிக்கொண்டு அறிவை வளர்த்துக் கொள்கிறது. அது தூண்டப்படுதலினால் விருத்தியடைந்து வியக்கவைக்கும் வேகத்தில் - முதல் ஐந்து வருட காலத்தில் கிட்டத்தட்ட 90% அளவுக்கு - வளர்கிறது!
|
|
ஒவ்வொரு நொடியிலும் ஆயிரக்கணக்கான மின்னணு இணைப்புகளை மூளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் காலகட்டமாகிய தவழும் மற்றும் கைக்குழந்தைப் பருவம்தான் ஒரு மொழியை கற்றுக்கொள்ள மிகச்சுலபமான
காலம் ஆகும். அப்போது குழந்தை எழுதப்பட்ட மற்றும் பேசப்படும் வார்த்தைகளை ஒரே சமயத்தில் மிகமிகச் சுலபமாக கற்கிறது.
பார்வை துழாவி நிலைபெற ஆரம்பித்த பின்னர், தொடரும் நாட்களே குழந்தைகள் படிக்கத்துவங்குவதற்கு சிறந்த சமயமாகும். சுமார் 50 சதவீதம் குழந்தைகள், பிறந்த இரண்டு மாதங்களி்ல் பார்வையால்
துழாவ ஆரம்பிக்கும். மொத்த எண்ணிக்கையில், கிட்டத்தட்ட 90% குழந்தைகளுக்கு மூன்று மாதங்களில் பார்வை நிலைபெற்று விடும்.
துவக்க கால வாழ்வில் மூளையின் நியூரோப்லாஸ்ட்டிசிடி (சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இயல் தன்மை மாறுவதும் அல்லது மாற்றிக்கொள்வதும்) அதிகமாக இருப்பதால் படிப்பதற்கு ஏற்றார்ப்போல் மூளை
மிகத்திறமையாக விருத்தியாக வாய்ப்புள்ளது; அதனால் பேசும் மொழியை எப்படி இயற்கையாக புரிந்து கொள்கிறதோ அந்த அளவுக்கு குழந்தையால் படிக்கவும் முடியும்.
|
|
|
|
|
நீங்கள் என்ன பெறுகிறீர்கள்
"யுவர் பேபி கேன் ரீட்!" - டீலக்ஸ் கிட்'டுடன் உங்கள் குழந்தையினுள் பொதிந்திருக்கும் படிக்கும் திறனை வெளிக்கொணர்வதற்கான கருவிகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
உங்கள் குழந்தைக்கு:
• "யுவர் பேபி கேன் ரீட்!" முழுமையான 5 நிலை டிவிடி படிக்கும் திட்டம். இந்த வேடிக்கையான பரிவர்த்தனையுடன் கூடிய வீடியோக்கள் உங்கள் குழந்தையை விளையாட்டுபோல் படிக்க வைத்து மகிழ வைக்கும்.
• ஒன்றினுள்-ஒன்று-வழுக்கி-நகரும் வகை வார்த்தை அட்டைகளைக் கொண்ட 5 தொகுப்புகள். ஒவ்வொரு நிலை அடுக்கிலும் இந்த "படித்து-விளையாடு" வகை அட்டைகள் உங்கள் குழந்தை கற்றுக்கொண்டதை அழுத்தமாக மனதில் பதிய வைக்கும்.
• "அட்டையைத்-உயர்த்திப்-பார்" வகை புத்தகங்கள் ஐந்து. ஒவ்வொரு நிலை அடுக்குடனும் வார்த்தை மற்றும் அதன் படம் கொண்ட புத்தகங்கள் இணைப்பாக வரும். இப்புத்தகங்கள் டிவிடியில் வரும் பழக்கமான வார்த்தைகளை புது விதத்தில் அறிமுகப்படுத்தும்.
• ஆரம்பகாலக் கற்றல் பயிற்சிவகுப்பு டிவிடி. துவக்க கால மொழி மேம்படுத்தலுக்கு வேடிக்கையையும், பல்முனைப்படுத்திய உணர்தலையும் கொண்ட அணுகுமுறையின் ரகசியங்களை டாக்டர் டிட்ஸர் பகிர்ந்து கொள்கிறார்.
• பெற்றோர் வழிகாட்டிக் கையேடு. "யுவர் பேபி கேன் ரீட்!" செயல் திட்டத்திற்கான படிப்படியான குறிப்பாணைகளை அளிக்கிறது.
• கற்றுக்கொடுக்கும் அட்டைகள்: உங்கள் குழந்தையுடன் விளயாடுவதற்கான, 15 வேடிக்கை விளையாட்டுக்கள், 83 இரு-பக்க, பரிவத்தனை-வகை அட்டைகளில்.
• எனது முதல் வார்த்தைகள்: வளரும் மனங்களுக்கான 30 வார்த்தைகள். வார்த்தைகளை வேடிக்கையாகவும் சுலபமாகவும் கற்றுக்கொள்ளச்செய்யும், செருகல்களுடன் கூடிய பக்கங்கள் கொண்ட புத்தகம்.
|
 |
|
|
|
 |